இயல் - இசை - நாடகம் என முத்தமிழாய் வகுக்கப்பட்டது தமிழ் மொழி. இன்று, அறிவியல் - தொழில்நுட்ப வளர்ச்சியின் தேவையை உணர்ந்து நான்காம் தமிழென விரிந்துள்ளது. அந்த வகையில், இந்த 'நான்காம் தமிழ்' என்பது புதிய அறிவியல் - தொழில்நுட்ப உலகின் அழகியலை வடிவமைக்கும் நோக்கோடு உருவாக்கப்பட்டுள்ளது.

அழகுணர்ச்சி நிறைந்தது தான் இந்த மானுட வாழ்வு. பேசும் மொழியும் - கேட்கும் ஒலியும் - பார்க்கும் வெளியும் அழகு நிறைந்தவை. அந்த அழகை இரசிப்பது என்பது வாழ்வை இனிமைப்படுத்துகிறது - வாழ்வை உயிர்ப்புள்ளதாக்குகிறது - வாழ்வுக்கு செழிப்பூட்டுகின்றது. அப்படிப்பட்ட அழகை வடிவமைப்பது என்பது உயிரூட்டம்கொண்ட கலையாகும்.

'தமிழுக்கு அமுதென்று பேர்' என்பது பாவேந்தர் பாரதிதாசன் வரிகள். 'தமிழுக்கு அழகென்று பேர்' என்கிற புதுவரியை நாம் உருவாக்குவோம். அதன் அடிப்படையில், தமிழின் வடிவமைப்புத் துறையின் புதிய உறவாய் நாமும் இணைகிறோம். தமிழழகு உலகெலாம் பரவ - உலகழகு தமிழர் மனம் கவர - புதிய மொழியாய் நான்காம் தமிழ்.